Mission: To Provide quality Engineers with a mind of service and spirituality to form a society of Engineering excellence for up-building the technological fronts and economy of the Nation with emphasis to downtrodden and rural society.
About Us  |  Courses  |  Faculty  |  Facilities  |  Academic  |  Contact Us  |  Campus Tour 


FAQ

 1. நான் பாலிடெக்னிக்கில் சேர கல்வித் தகுதி என்ன? எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்?

 நீங்கள் பாலிடெக்னிக்கில் சேர 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. குறைந்த பட்சம் 175/500 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

 2. நான் 10ம் வகுப்பின் தேர்ச்சி பெறவில்லை என்றால் பாலிடெக்னிக்கில் சேர முடியுமா?

 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றால் பாலிடெக்னிக்கில் நிச்சயமாக சேர முடியாது. உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்று, வருடம் வீணாகாமல் பாலிடெக்னிக்கில் சேரலாம்.

 3. 12ம் வகுப்பு முடித்திருந்தால் பாலிடெக்னிக்கில் எந்த பிரிவில் சேரலாம்?

 12ம் வகுப்பில் முதல் பிரிவு (First Group) - (கணிதம், இயற்பியல், வேதியியல் அல்லது கணிதம், இயற்பியல், கம்ப்யூட்டர்) படித்திருந்தாலும், தொழில் கல்வி (Vocational Group) படித்திருந்தாலும் நேரடியாக இரண்டாம் ஆண்டில் எந்தப் பிரிவில் வேண்டுமானாலும் சேரலாம்.

  4. I.T.I. முடித்திருந்தால் பாலிடெக்னிக்கில் சேரமுடியுமா?

  I.T.I. முடித்திருந்தால் பாலிடெக்னிக்கில் சேரலாம். ஆனால், I.T.I. ல் எந்த Trade ல் படித்துள்ளீர்களோ அதே பிரிவில்தான் பாலிடெக்னிக்கிலும் சேரமுடியும்.

  5. உங்கள் கல்லூரியின் சிறப்பம்சம் என்ன?

  • ஆதிபராசக்தி தொழில் நுட்பக் கல்லூரி 36 வருட பழமை வாய்ந்த பெருமை மிக்க கல்லூரி.
  • கடந்த 15 வருடங்களுக்கு மேலாக மாநிலத்தில் முதலாவதாக உள்ள கல்லூரி.
  • AICTE, New Delhi ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி.
  • ISO 9001-2008 அங்கீகாரம் பெற்ற கல்லூரி.
  • Civil மற்றும் EEE பிரிவுகள் NBA வினால் Accreditation பெற்ற கல்லூரி.
  • இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் குறைந்த பட்சம் 10 ஆண்டுகளும், துறைத்தலைவர்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாகவும் அனுபவம் பெற்றவர்கள்.
  • மிகச்சிறந்த கட்டமைப்பு, தேசியத் தரம் வாய்ந்த ஆய்வுக்கூடங்கள் மற்று தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் நவீன் கருவிகள்.
  • Multimedia வகுப்பறைகள் கொண்ட கல்லூரி.
  • Wi-Fi வசதி கொண்ட கல்லூரி.
  • பயிலும் ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாக பயன்படுத்தும் வகையில் 200 க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள்.
  • ஒவ்வொரு வருடமும் Campus Interview மூலம் குறைந்த பட்சம் 150 மாணவர்களுக்கு பல்வேறு நிறுவனங்களில் ரூ. 10000/- முதல் ரூ. 24000/- வரை சம்பளத்தில் வேலை வாய்ப்பு.
  • இலவச பேருந்து வசதி - சென்னை, செங்கல்பட்டு, கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், பாண்டிச்சேரி, மரக்காணம், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, செய்யார், வந்தவாசி, திண்டிவனம், உத்திரமேரூர், கடப்பாக்கம் மற்றும் செய்யூர் மார்க்கமாக.
  • இலவச மருத்துவ வசதி மற்றும் இன்சூரன்ஸ் வசதி.
  • அரசு வாரியத் தேர்வில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவ/மாணவியருக்கு கல்விக்கட்டணம் வாபஸ்.
  • உயர்ந்தபட்ச மதிப்பெண் பெறும் மாணவ/மாணவியருக்கு நிர்வாகத்தின் மூலமாக இலவச மேற்படிப்பு.

  6. உங்கள் கல்லூரியில் என்னென்ன பாடப்பிரிவுகள் உள்ளன? கல்விக் கட்டணம் எவ்வளவு?

  ஆதிபராசக்தி தொழில் நுட்பக் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்&எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ்&கம்யூனிகேஷன் மற்றும் கம்ப்யூட்டர் பிரிவுகள் உள்ளன. எந்தப் பிரிவில் சேர்ந்தாலும் கல்விக்கட்டணம் ஒரு செமஸ்டருக்கு ரூ.15000/- மட்டுமே.

  7. நான் SC பிரிவைச் சேர்ந்தவன். எனக்கு கல்விக் கட்டணத்தில் விலக்கு உண்டா?

  SC பிரிவைச் சேர்ந்த மாணவ/மாணவியருக்கு மத்திய அரசாங்கத்தால் வருடத்திற்கு ரூ.30000/- கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதைப் பெற வழிமுறை செய்து கொடுக்கப்படுகிறது.

  8. எல்லா பிரிவினர்களுக்கும் ஸ்காலர்ஷிப் உண்டா? எவ்வளவு?

  முஸ்லீம் மற்றும் கிறிஸ்டியன் பிரிவைச் சேர்ந்த மாணவ/மாணவியருக்கு ஸ்காலர்ஷிப் ரூ.4000/- பெற வழி செய்து தரப்படும்.
  நமது கல்லூரியில் சேரும் மாணவ/மாணவிகளில் 10 ம் வகுப்பில் உயர்ந்தபட்ச மதிப்பெண் பெறுபவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் தந்தை பெரியார் ஸ்காலர்ஷிப் வருடத்திற்கு ரூ.10000/- பெற ஏற்பாடு செய்து தரப்படும்.
  மாணவிகளுக்கு மட்டும் பிரகதி ஸ்காலர்ஷிப் மூலம் வருடத்திற்கு ரூ.25000/- பெற ஏற்பாடு செய்து தரப்படும்.

  9. தவணை முறையில் கல்விக் கட்டணம் செலுத்தலாமா?

  கல்லூரி முதல்வரின் அனுமதி பெற்று தவணை முறையில் கல்விக் கட்டணம் செலுத்தலாம்.

  10. உங்கள் கல்லூரிக்கு யூனிபார்ம் உண்டா?

  Lab நடக்கும் நாட்களில் மட்டும் யூனிபார்ம் அணிந்து வர வேண்டும். மேலும் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி வண்ணத்தில் யூனிபார்ம் உண்டு. வெள்ளிக் கிழமை மட்டும் அனைத்து மாணவ/மாணவிகளும் செவ்வாடையில் வர வேண்டும்.

  11. நான் 10 ம் வகுப்பு வரை தாய்மொழி தமிழில் படித்தேன். டிப்ளமாவில் தமிழில் படிக்கலாமா? தமிழில் தேர்வு எழுதலாமா?

  டிப்ளமா தமிழில் படிக்கலாம், எழுதலாம். பேசுவது போல் தமிழ் ஆங்கிலம் கலந்தும் தேர்வு எழுதலாம்.

  12. தங்கள் கல்லூரிக்கு வருவதற்கு பஸ் வசதி உண்டா? எந்தெந்த தடத்தில் பஸ் இயக்கப்படுகிறது?

  கல்லூரிக்கு வருவதற்கு இலவச பேருந்து வசதி செய்யப்படுள்ளது. ஒரு அரசாங்கம் என்ன நினைக்கிறதோ அதை இக்கல்லூரி செயல்படுத்துகிறது. பஸ் ரூட் மற்றும் நேரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்

  13. எனது அண்ணன் B.A. படித்துள்ளார். அவர் டிப்ளமாவில் சேர முடியுமா?

  டிப்ளமாவில் சேர பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். வயது வரம்பு கிடையாது.

  14. தங்கள் கல்லூரியில் படித்தால் எனக்கு எந்த மாதிரியான வேலைவாய்ப்பு கிடைக்கும்?

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் குறைந்தபட்சம் ரூ.10000/- முதல் அதிகபட்சம் ரூ.24000/ வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும். இதே இணையதளத்தில் Training and Placement என்ற பக்கத்தில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவ/மாணவியர்களின் புகைப்படம் மற்றும் அவர்கள் வேலைவாய்ப்பு பெற்ற நிறுவனங்களின் பெயர்களைக் காணலாம்.

  15. டிப்ளமா முடித்தவுடன் மேற்படிப்பு படிக்க என்ன வசதிகள் உள்ளன?

  பொதுவாக நமது கல்லூரியில் படித்து முடிக்கும் மாணவ/மாணவிகள் தமிழகத்தில் உள்ள Top 25 எஞ்சினியரிங் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கின்றனர். இந்த் ஆண்டு முதல், ஒவ்வொரு பிரிவிலும் அதிக மதிப்பெண் பெறும் மாணவ/மாணவிகளுக்கு நிர்வாகம் தமது சொந்த செலவில் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் இலவசமாக படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


About Us  |  Courses  |  Faculty  |  Facilities  |  Academic  |  Contact Us  |  Campus Tour

© Copy Rights 2006 www.aptcmmr.com All Rights Reserved